நேரடி தொலைக்காட்சி விவாதத்துக்கு தயாராகும் அரசியல் தலைவர்கள்

பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினுக்கும் இடையில் இன்று ITV-யில் நேரடி தொலைக்காட்சி விவாதமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த விவாதத்துக்கு முன்னதாக தேர்தல் பிரசாரங்களில் கோர்பினால் புறந்தள்ளப்பட்டதாக கருதப்படும் நான்கு கேள்விகள் அடங்கிய கடிதமொன்றை பிரதமர் தொழிற்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பின்வரும் தனது கேள்விகளுக்கான பதில்களை விவாதத்தின் போதோ அல்லது அதற்கு முன்னதாகவோ வழங்குமாறு கோர்பினிடம் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை குறித்த இரண்டாவது வாக்கெடுப்பை நீங்கள் முன்மொழிகிறீர்கள். அந்த வாக்கெடுப்பில் நீங்கள் எதற்கு ஆதரவளிப்பீர்கள்?
  • நீங்கள் சுதந்திர குடியேற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவீர்களா, பராமரிப்பீர்களா அல்லது நீட்டிக்கிறீர்களா? தொழிற்கட்சியின் கீழ் குடியேற்றம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்குமா?
  • சந்தைகளுக்கான அணுகலுக்கு” ஈடாக ஐரோப்பிய ஒன்றிய வரவுசெலவுத் திட்டத்தில் எவ்வளவு பணம் செலுத்த நீங்கள் தயாராக இருப்பீர்கள்?
  • ஒவ்வொரு தொழிற்கட்சி வேட்பாளரும் உங்கள் பிரெக்ஸிற் கொள்கையை ஆதரிக்கிறார்கள் என உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா?

இந்த விவாதத்தில் தமது கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என லிபரல் ஜனநாயகக் கட்சியும் ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியும் முன்வைத்த சட்ட சவாலில் அவர்கள் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கான சூர்யாவின் பாடல் குறித்த அறிவிப்பு

Tue Nov 19 , 2019
x இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘சூரரைப் போற்று’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் […]

விழாக்கள்