பிரித்தானிய இராணுவத்தின் மீது விசாரணை

போர்க் குற்றங்களை மூடி மறைத்தமை தொடர்பில் பிரித்தானிய இராணுவத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளது.

போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள், சர்வதேச ஊடகமொன்றின் நிகழ்ச்சியினூடாக வௌிக்கொணரப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

பிரித்தானிய இராணுவம் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கும் முதலாவது விசாரணையாக இது அமையவுள்ளது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படையினரால் சிவிலியன் கொல்லப்பட்ட விடயத்தை அந்நாடு மூடி மறைத்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகக் கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளை மிகவும் தீவிரமானவையாகக் கருதுவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகளை பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆயுததாரிகளின் தாக்குதலில் மாலி இராணுவத்தினர் உயிரிழப்பு

Tue Nov 19 , 2019
x மேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் கிழக்குப் பிராந்தியத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்போது மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். மாலி மற்றும் […]

விழாக்கள்