ஒரே நாளில் 700 விமானங்களை ரத்து செய்தது லூப்தான்ஸா நிறுவனம்!

ஜெர்மனியின் பிரபல லூப்தான்ஸா விமான நிறுவன ஊழியர்கள் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்நிறுவனத்தின் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமாக திகழும் லூப்தான்ஸா, பல்வேறு நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில், அந்நிறுவன ஊழியர்கள் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று ஒரே நாளில் 700 விமானங்களை அந்நிறுவனம் ரத்து செய்தது.

பிராங்பர்ட் விமான நிலையத்தில் மட்டும் 400 விமானங்களை லூப்தான்ஸா ரத்து செய்தது. முனிச் விமான நிலையத்தில் 250 விமானங்களும், மேலும் சில சிறிய விமான நிலையங்களில் 50 வரையிலான விமானங்களும் லூப்தான்ஸா நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டன.

இதனால் லூப்தான்ஸா நிறுவன விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரஜினியையும் என்னையும் யாராலும் பிரிக்க முடியாது- கமல்!

Fri Nov 8 , 2019
x சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு […]

விழாக்கள்