நேபாளத்தில் இலங்கை மாணவர்களுக்கு சாதாரண தர பரீட்டை எழுத வசதி

நேபாளத்தின் காத்மண்டு நகரில் இம்முறை நடைபெறவுள்ள 13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளும் 7 மாணவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள கல்வி பொது சாதாரண தர பரீட்டைக்கு தோற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைவாக கல்வி அமைச்சின் மற்றுமொரு நடவடிக்கையாக இந்த மாணவர்களுக்கு நேபாளத்திலேயே இந்த பரீட்சைக்கு தோற்றுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் நேபாளத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் இணைப்பு நடவடிக்கையின் மூலம் போட்டியில் கலந்து கொள்ளும் சாதாரண தர பரீட்சார்த்திகளான இலங்கை மாணவர்களுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் சட்ட விதிகளுக்கு அமைவாக பாதுகாப்பான முறையில் இலங்கையில் இந்த பரீட்டை நடைபெறும் நேரத்திற்கு அமைவாக இந்த மாணவர்களுக்கு நேபாளம் காத்மண்டு நகரில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு இந்த வசதிகள் செய்யப்படவுள்ளன.

இதற்காக நேபாளத்திற்கு செல்லவுள்ள இலங்கை பரீட்டை திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் இந்த பரீட்சை தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இந்த அதிகாரிகளின் விமான பயணச் செலவுகளை தேசிய ஒலிம்பிக் குழு ஏற்றுக்கொள்ள முன் வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒரே நாளில் 700 விமானங்களை ரத்து செய்தது லூப்தான்ஸா நிறுவனம்!

Fri Nov 8 , 2019
x ஜெர்மனியின் பிரபல லூப்தான்ஸா விமான நிறுவன ஊழியர்கள் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்நிறுவனத்தின் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமாக திகழும் […]

விழாக்கள்