டெங்கு நோயினால் 85 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தில் கடந்த 11 மாத காலப் பகுதியில் நாட்டில் பல்வேறு பிரதேசங் களில் 64,290 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேபோன்று இந்த வருடத்தில் இக் காலப்பகுதியில் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்பொழுது நிலவும் பருவ பெயர்ச்சி காலநிலையை அடுத்து கொழும்பு, கம்பஹா, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக நுளம்புகள் உள்ள இடங்களை துப்பரவு செய்வது தொடர்பில் பொதுமக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நேபாளத்தில் இலங்கை மாணவர்களுக்கு சாதாரண தர பரீட்டை எழுத வசதி

Fri Nov 8 , 2019
x நேபாளத்தின் காத்மண்டு நகரில் இம்முறை நடைபெறவுள்ள 13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளும் 7 மாணவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள கல்வி பொது […]

விழாக்கள்