கீழடி – ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !

கீழடியில் கிடைத்திருக்கும் தொல்லியல் ஆதாரங்கள் தமிழகத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகர நாகரிகம் நிலவி வந்ததை நிரூபிக்கின்றன.

ரு கரித்துண்டின் ஆயுளை வைத்துக்கொண்டு தமிழின் வயது மூத்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? இப்படியெல்லாம் பேசி, நீங்கள் வேண்டுமானால் சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள்.

இதை வெளிநாட்டு ஆய்வாளர்கள் கேட்டால் சிரிப்பார்கள்.” –  கீழடி தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார் பத்திரிகையாளர் பி.ஏ.கிருஷ்ணன்.

விவாதத்தில் துறைசார் வல்லுநர்கள், முன்னாள் துணைவேந்தர் முனைவர் ராசேந்திரன் மற்றும் பேராசிரியர் ராஜவேலு ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அதே விவாதத்தில் கீழடியைக் குறித்து, அதன் தொடக்கம் முதலே பேசி, எழுதிச் செயல்பட்டு வரும் மார்க்சிஸ்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் இருந்தார்.

இவர்களுடன், தொல்லியல் ஆராய்ச்சிக்கும் வரலாற்று ஆய்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத இருவர், “அவாள்” தரப்பை முன்வைக்க வந்திருந்தனர். ஒருவர் பி.ஏ. கிருஷ்ணன், மற்றொருவர் பத்திரிகையாளர் மாலன்.

காலத்தால் பிந்தைய பானையோடுகளை யாரேனும் ஆழமாகக் குழி தோண்டிப் புதைத்து இருக்க வாய்ப்பு உள்ளதாகவும்; எனவே, அதே மட்டத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கரித்துண்டுகளின் ஆயுளைக் கொண்டு அதனுடன் கிடைத்த பானையோடுகளின் ஆயுளை நிர்ணயிப்பது தவறு என்பது பி.ஏ.கிருஷ்ணனின் வாதம்.

அதே போல் கீழடியில் இதுவரை தோண்டப்பட்ட இடங்களில் தெருக்கள் ஏதும் இருந்த அடையாளம் கிடைக்கவில்லை என்றும், கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்கள் இல்லை என்றும் குறிப்பிட்ட பி.ஏ.கிருஷ்ணன்.

இதே காரணங்களுக்காக அதை ஒரு நகர நாகரிகம் எனக் குறிப்பிடுவது தவறு என்றார். மேலும், நதிக்கரை நாகரிகம் என்பது பெரிய நதிக்கரையில் தான் இருக்கும்” என்றொரு கருத்தைச் சொல்லி விவாத அரங்கில் இருந்த அனைவரையும் திடுக்கிட வைத்தார்.

பி.ஏ. கிருஷ்ணனுக்குப் பதிலளித்த ராஜவேலு, ராசேந்திரன் மற்றும் சு.வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் உலகம் முழுவதும் அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் தொன்மையைக் கணிக்க ஆய்வாளர்கள் சார்ந்திருப்பது கரிமப் பரிசோதனை என்பதை சுட்டிக்காட்டினர்.

அதேபோல் அகழாய்விற்காகத் தோண்டப்படும் குழியில் வெவ்வேறு மட்டங்களில் கிடைக்கும் பொருட்களுடைய காலம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது என்பதை விளக்கினர்.

மேலும், கீழடியில் கிடைத்திருக்கும் எழுத்துக்களின் தொன்மையை பி.ஏ. கிருஷ்ணன் சொல்வது போல் ஒரு “கரித்துண்டை”க் கொண்டு மட்டும் தீர்மானிக்கவில்லை எனவும், பிற இடங்களில் இதே போல் கிடைத்த எழுத்துக்களுடன் ஒப்பிட்டே அவற்றின் காலத்தை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர் எனவும் குறிப்பிட்டனர்.

மேலும், தோண்டப்பட்ட இடம் ஒரு சிறிய பகுதி என்பதையும் அது பிரதானமாகத் தொழிற்கூடம் அமைந்திருந்த பகுதி என்பதையும், மக்கள் வசிப்பிடம் அகழ்வாய்வு செய்யப்படும்போது தெரு அமைப்புகள் வெளிப்படும் என்பதையும் பிறர் சுட்டிக்காட்டினர்.

இந்த விவாதங்களின் போது சமஸ்கிருத எழுத்துக்களுக்கான தொல்லியல் ஆதாரங்கள் கிறிஸ்துவுக்கு பிந்தைய நூற்றாண்டிலேயே கிடைப்பதையும், தமிழுக்கான ஆதாரம் கிறிஸ்துவுக்கு முன் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிடைப்பதையும் கீழடியை முன்வைத்துப் பேசினார் பேராசிரியர் ராஜவேலு.

இதற்கு பதிலளித்த பி.ஏ.கிருஷ்ணன், சமஸ்கிருதத்தின் தொன்மையை அகச்சான்றுகளைக் கொண்டே அளவிட வேண்டும் எனக் கூச்சலிட ஆரம்பித்தார். அதை இடைமறித்த சு.வெங்கடேசன், தமிழின் தொன்மை என்று வரும் போது அறிவியல் சான்றுகளைக்கூட நுணுகி ஆராய்வதையும் சமஸ்கிருதத்தின் தொன்மை என்று வரும்போது அகச்சான்றே போதும் என கண்களை மூடிக் கொள்வதையும் சுட்டிக்காட்டினார். பி.ஏ.கிருஷ்ணனிடம் அதற்குப் பதில் இல்லை.

பார்ப்பன வட்டாரங்களில் கீழடி ஆய்வு முடிவுகள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதைச் சந்தேகமின்றிப் புரிந்து கொள்வதற்கு இந்த விவாதம் ஒரு சிறிய உதாரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரி-20 உலகக்கிண்ணத்தில் சம்பியன் கிண்ணம் யாருக்கு? கில்கிறிஸ்ட் சுவாரஸ்ய பதில்!

Thu Nov 7 , 2019
x ரி-20 உலகக்கிண்ணம் குறித்த பல சுவாரஸ்யமான விடயங்களை அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் பகிர்ந்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே […]

விழாக்கள்