Home India - இந்தியா செய்திகள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் எச்சரிக்கை!

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் எச்சரிக்கை!

18
0

வங்கக் கடலில் அந்தமான் அருகே உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று(புதன்கிழமை) புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்தும், தமிழகம் மற்றும் புதுவையில் நிலவும் வானிலை குறித்தும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது, அந்தமான் அருகே உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறி வட மேற்கு திசையில் வடக்கு ஒடிசாவை நோக்கி நகரும் எனவும் இது தமிழகத்துக்கு வர வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை இது புயலாக வலுப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ‘புல் புல்’ என்று பெயரிடப்படும் என குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரயில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here