ஐந்து வருடங்களாக மழை காணாத நிலம் – ஒரு குடம் தண்ணீர் பிடிக்க ஒரு நாள் காத்திருக்கும் அவலம்!

கடந்த ஐந்து வருடங்களாக ஒரு துளி மழையையேனும் காணாத நிலம் – உலகத்திற்கான ஓர் எச்சரிக்கையாக பார்க்கப்படுகின்றது. தென்னாபிரிக்காவின் பல நகரங்களின் நிலை தற்போது இவ்வாறுதான் உள்ளது.

ஒரு சமயத்தில் தினமும் 40 ஆயிரம் பேரின் தாகத்தைத் தீர்த்த அணை வறண்டு, ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் போய்விட்டது.

குடி தண்ணீர் இல்லை என்றால் ஒரு சமூகத்தில் என்னவெல்லாம் அசம்பாவிதங்கள் நடக்குமோ அதுவெல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.

குடிநீர் இன்றி கொத்து கொத்தாகக் கால்நடைகள் செத்து மடிவதுடன், ஒரு குடம் தண்ணீரைப் பிடிக்க ஒரு நாள் முழுவதும் காத்துக் கிடக்க வேண்டிய நிலைக்கு அங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அணைகள் எல்லாம் வற்றிய பிறகு சில ஆழ்துளைக் கிணறுகள் மட்டுமே அந்த மக்களின் தாகத்தைத் தணிக்கின்றன.

ஆனால், அது மட்டுமே போதுமானதாக இல்லை. உண்மையில் இது மற்ற நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை என்று சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தென் ஆப்ரிக்காவின் குறிப்பிட்ட இந்த பகுதி சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வெப்பமடைவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

புவி வெப்பமயமாதலை ஏனைய நாடுகள் தடுக்கவில்லை என்றால் இந்த நிலை பிற இடங்களிலும் ஏற்படலாமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை அறிவித்தது புளொட்

Wed Nov 6 , 2019
x ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே தமிழைரசுக் கட்சியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக […]

விழாக்கள்