பிரெக்ஸிற் காலம் 2020 க்குப் பின்னர் நீடிக்கப்படாது : மைக்கல் கோவ்

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிரெக்ஸிற் காலக்கெடுவை நிறைவேற்றத் தவறிய போதிலும் 2020 க்குப் பின்னர் பிரெக்ஸிற் காலம் நீடிக்கப்படாது என்று அமைச்சர் மைக்கல் கோவ் உறுதியளித்துள்ளார்.

மேலும் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொன்சர்வேற்றிவ் கட்சி பெரும்பான்மையைப் பெற்று அரசாங்கத்தை அமைக்குமானால் உறுதிமொழி நிறைவேற்றப்படும் என்று தெரிவித்த அவர் 90 நாட்களுக்குள் பொரிஸ் ஜோன்சன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்டதால் இது சாத்தியமானது என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த பிரெக்ஸிற் ஒப்பந்தமானது முன்னாள் பிரதமர் தெரேசா மேயின் ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் கூறினார்.

அத்துடன் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளும் தொழிற்கட்சி எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய முடியும் என்றும் மைக்கல் கோவ் கேள்வி எழுப்பினார்,

இஸ்லாமிய எதிர்ப்புக் குறித்து ஒரு முழுமையான சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறிய கோவ் அதை யார் மேற்கொள்வார்கள் என்று கூறவில்லை.

இதேவேளை, பிரித்தானிய ஜனநாயகத்தில் ரஷ்ய தலையீடு குறித்து ஒரு அறிக்கையை வெளியிட பிரதமர் ஜோன்சன் மறுத்ததையும் அவர் ஆதரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: வவுனியாவில் 42 கிராமங்களுக்கு மின் தடை!

Tue Nov 5 , 2019
x வவுனியாவில் மூன்று கிராம அலுவலர் பிரிவிலுள்ள 42 கிராமங்களில் நேற்றுமுதல் மின்தடை ஏற்பட்டுள்ளது. வவுனியா மின்சார சபை ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையால் மக்கள் பல்வேறு சிரமங்களை […]

விழாக்கள்