நைஜல் ஃபராஜ் ஓய்வுபெற வேண்டும் : அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக்

கொன்சர்வேற்றிவ் அரசாங்கத்தால் மட்டுமே பிரெக்ஸிற்றை வழங்கமுடியும் என்பதால் நைஜல் ஃபராஜ் களத்தில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் வரை தனது போராட்டத்தைத் தொடர்வேன் என பிரெக்ஸிற் கட்சித் தலைவர் நைஜல் ஃபராஜ் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் ஒப்பந்தம் ஒரு ரிமெய்ன் பிரெக்ஸிற் (Remain Brexit) என்றும் குறிப்பிட்டார்.

நைஜல் ஃபராஜ், எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் வாக்குகளில் சமரசம் செய்யலாமா என்பது குறித்து ஜேக்கப் ரீஸ்-மோக்கிடம் எல்.பி.சி. வானொலி நிகழ்ச்சியில் நிக் ஃபெராரி கேள்வி எழுப்பினார்.

நிக் ஃபெராரியின் கேள்விக்குப் பதிலளித்த ஜேக்கப் ரீஸ்-மோக்; பிரெக்ஸிற்றை விரும்பும் நைஜல் ஃபராஜை நான் பாராட்டுகிறேன். பிரெக்ஸிற் எவ்வளவு முக்கியமானது என்று பல சந்தர்ப்பங்களில் நான் குறிப்பிட்டுள்ளேன்.

மேலும் அவர் பிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களின் வாக்குகளைப் பங்குபோட நினைப்பது தவறு.

நாங்கள் வெளியேறுவதற்கு வாக்களித்தோம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எமது நாட்டை வெளியேற்றுவதற்கான ஒரு ஒப்பந்தம் எங்களுக்குக் கிடைத்துள்ளது. மேலும் உலகின் ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இப்போது, ​​பிரெக்ஸிற் கட்சி வாக்காளர்கள் புத்திசாலிகள் என்று நான் நினைக்கிறேன். பிரெக்ஸிற்றைப் பெறுவதற்கான ஒரே வழி கொன்சர்வேற்றிவிற்கு வாக்களிப்பதே என்பதை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள். எனவே நைஜல் ஃபராஜ் களத்தில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்று ஜேக்கப் ரீஸ்-மோக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஹொங்கொங்கின் நிர்வாகத் தலைவருடன், சீன ஜனாதிபதி சந்திப்பு!

Tue Nov 5 , 2019
x ஹொங்கொங் நகரில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அதற்குரிய நிர்வாகத் தலைவர் கேரிலாம் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். சீனாவின் எல்லைக்குட்பட்ட தன்னாட்சி உரிமம் கொண்ட ஹொங்கொங்கில் […]

விழாக்கள்