வங்கி மோசடி தொடர்பாக 15 மாநிலங்களில் CBI அதிரடி சோதனை

வங்கி மோசடி தொடர்பாக தமிழகம், கேரளா உட்பட 15 மாநிலங்களில் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மாநிலங்களில் உள்ள 169 இடங்களிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவினர் தரப்பில் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த வழக்குகளுக்கு தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதற்கமைய தமிழகம், கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 169 இடங்களில் CBI ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நைஜல் ஃபராஜ் ஓய்வுபெற வேண்டும் : அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக்

Tue Nov 5 , 2019
x கொன்சர்வேற்றிவ் அரசாங்கத்தால் மட்டுமே பிரெக்ஸிற்றை வழங்கமுடியும் என்பதால் நைஜல் ஃபராஜ் களத்தில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் வரை தனது போராட்டத்தைத் […]

அதிகம் படித்தவை

விழாக்கள்