‘காளிதாஸ்’ படத்தை பார்த்து பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்

நடிகர் பரத்தின் ‘காளிதாஸ்’ படத்தை பார்த்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பாலாஜி மோகன் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

பரத் நடிப்பில் காளிதாஸ் திரைப்படம் வெகு விரைவில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த படத்தை பார்த்து விட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் பாலாஜி மோகனும் பாராட்டியுள்ளனர்.

இது தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் படத்தையும் படக்குழுவையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

அதே போன்று பாலாஜி மோகன் சிறப்பான திரில்லர் படம், கதையை அருமையாக கொண்டு சென்றுள்ளனர் எனவும் பாராட்டி ருவீட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொலிவுட் பாட்ஷாவை மகிழ்ச்சியில் நனைத்த புர்ஜ் கட்டிடம்!

Sun Nov 3 , 2019
x உலகிலேயே அதிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தில் பொலிவுட் நடிகர் ஷாருக்கானின்  பெயர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக் கான் தனது 54 பிறந்த நாளை நேற்று (சனிக்கிழமை) கொண்டாடினார். இதனை […]

அதிகம் படித்தவை

விழாக்கள்