புதிய இந்தியாவை கட்டமைத்து வருகிறோம் – தாய்லாந்தில் பிரதமர்

புதிய இந்தியாவை கட்டமைத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து இந்தியர்களிடம் தெரிவித்தார்.

தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு நேற்று ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக பேங்கொக்கிற்கு விஜயம் செய்துள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான இந்தியர்களும் கலந்துகொண்டு பிரதமரை அன்போடு வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து பேங்கொக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் குழுமியிருந்த இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உரையாடினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், “பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு பின்னால் இருந்த மிகப்பெரும் காரணத்தை (காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து) இந்தியா அழித்து விட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு முடிவு சரியாக இருந்தால், அது உலகம் முழுவதும் எதிரொலிக்கும். அந்தவகையில் தாய்லாந்திலும் அதை நான் கேட்கிறேன்.

முடியாதது என்று கருதப்படுபவற்றை செய்து முடிக்கும் வகையில் எனது அரசு உழைத்து வருகிறது. சிறப்பாக பணியாற்றுவோர் மீது மக்கள் அதிகப்படியான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் எங்கள் அரசு ஏற்படுத்திய மாற்றங்களால்தான், மீண்டும் மிகப்பெரிய பெரும்பான்மையை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர்.

350 இலட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை எட்டுவதையே இலக்காக கொண்டு அதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். அந்தவகையில் புதிய இந்தியாவை கட்டமைத்து வருகிறோம்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாலி தீவிரவாத தாக்குதலுக்கு உரிமை கோரியது ஐ.எஸ்!

Sun Nov 3 , 2019
x மாலியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், அந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது. மாலியின் Menaka பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சோதனை […]

அதிகம் படித்தவை

விழாக்கள்