உத்தரப்பிரதேச தாக்குதல் : நால்வருக்கு மரணதண்டனை விதித்தது நீதிமன்றம்!

உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் உள்ள துணை இராணுவ படையினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த வழக்கு நேற்று (சனிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இம்ரான் ஷாஜாத், முஹம்மது பாரூக், முஹம்மது ஷரிப், சபாவ்தீன் ஆகிய நால்வருக்கே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜங் பஹதூருக்கு என்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ஃபைம் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டதுடன், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசம் மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் உள்ள துணை இராணுவப் படை முகாமின் மீது கடந்த 2008ஆம் ஆண்டு சில பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 வீரர்கள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சிலரை கைது செய்த பொலிஸார் 9 பேர் மீது வழக்கு தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புதிய இந்தியாவை கட்டமைத்து வருகிறோம் – தாய்லாந்தில் பிரதமர்

Sun Nov 3 , 2019
x புதிய இந்தியாவை கட்டமைத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து இந்தியர்களிடம் தெரிவித்தார். தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு நேற்று ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 […]

அதிகம் படித்தவை

விழாக்கள்