செல்வன் சுஜித் வில்சன்

தமிழ்நாட்டில் உள்ள திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25ஆம் தேதி மாலை 05:30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான்.
80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது.
குழந்தை இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டதாக தெரிவித்ததன் அடிப்படையில் சிறுவனின் மரணத்தை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சிறுவனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை முடிந்ததும், அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவனது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிறுவன் சுஜித்தின் மறைவிற்கு RIPBOOK, ஐ பி சி, தமிழ்வின், லங்காசிறி இணையத்தளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர் பெற்றோர், உற்றார், உறவினர்கள் அனைவரின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது. சுஜித்
………………

குழிக்குள் பரிதவிப்பு – ஒரு
குழந்தையின் பரிதவிப்பு
ஆழ் துளையில் ஆன்மா
அகப்பட்டதால் பரிதவிப்பு
சிரிச்சு பேசிய சிட்டு
சிக்கியது உள்ளே நெஞ்சு
அசைந்தது கைகள்
உயிர் ஊசல் ஆடியது இரு நாளாய்
பெற்ற வயிறு வற்ற
கத்தி அலறுது வெளியே
சுற்றம் கூடி தோண்டுது குழியை
எட்டிப் பிடிக்கும் ஆவலுடன் காலம் மட்டும் ஓடுது கையை பிடிக்க முடியல – மேலே
கலவரம் மட்டும் நடக்குது
பச்சைக் குழந்தை
பால் குடிக்கும் குழந்தை
எத்தனை நாள் பசி தாங்கும்
எல்லோருக்கும் தெரியும்
பசியால் பரிதவித்தியா சுஜித்
சுவாசிக்க ஏங்கினியா செல்லம்
சொல்ல வார்த்தை இல்லை எல்லாம்
நிசப்தமாக தொடருது
அம்மா அம்மா எனும் அழுகுரல்
ஆண்டவனுக்கு கேட்டிருக்கும்
ஆயுளைக் காப்பான் என்றும்
அன்னை மடியில் தவழுவான் என
நம்பிக்கை கொண்டோம் விடியல் காலை விடியாமல் போயிருக்கலாம்
விளையாட்டுப் பிள்ளை விசித்திரக் குழந்தை
விடியலைக் காணாது விடைபெற்றது ஆத்மா
பூவொன்றின் உதிர்வு கேட்டு
உள்ளமே அழுகிறது
விழுதிழந்த ஆலமரங்களாய்
மனங்கள் அழுதழுது
தமிழரின் விழிநீர் ஆறாகி ஓடுது
எங்கள் மகனே
உனது நினைவால் விழிநீர் சொரிகிறோம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருமதி நிரோஜினி மகிந்தன்

Fri Nov 1 , 2019
x யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிரோஜினி மகிந்தன் அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரவேலு, சின்னத்தங்கம் தம்பதிகள், அப்புக்குட்டி […]

விழாக்கள்