பொதுத்தேர்தலில் மற்றைய கட்சிகளுடன் எந்தவொரு ஒப்பந்தமுமில்லை: கோர்பின்

பொதுத்தேர்தலின் போது வேறு எந்தக் கட்சிகளுடனும் எந்த ஒப்பந்தங்களும் அமைக்கப் போவதில்லை என தொழிற்கட்சித் தலைவர் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பு முழுமையாக அகற்றப்பட்டதன் பின்னர் பொதுத்தேர்தல் ஒன்றை மகிழ்ச்சியாக எதிர்நோக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் எனவும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிரித்தானியாவை ஐரோப்பாவின் கரையில் குறைந்த வரி சூழலாக அமைக்க திட்டமிட்டுள்ளார் எனவும் கோர்பின் கூறினார்.

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் ஒன்றையே பிரதமர் விரும்புவதாகவும் ஆனால் அத்தகைய ஒப்பந்தம் ஒரு வழி ஒப்பந்தமாக மாத்திரமே அமையுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் தொழிற்கட்சி மக்களுக்கு பிரெக்ஸிற் குறித்த இறுதி முடிவை எடுப்பதற்கான வாய்ப்பைக் கொடுக்குமென தெரிவித்த கோர்பின் அந்த இறுதி முடிவுக்கு தொழிற்கட்சி அரசாங்கம் கட்டுப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் தொழிற்கட்சி அரசாங்கம் அதன் நிர்வாகத்தின் முதல் தசாப்தத்தில் ஸ்கொட்லாந்தில் £70 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்யும் என்றும் கோர்பின் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி – “உசுரோட வா மகனே” – வைரமுத்து உருக்கம்

Mon Oct 28 , 2019
x குழந்தை சுஜித் உயிருடன் திரும்பி வர வேண்டும் என கவிஞர் வைரமுத்து உருக்கமான கவிதை ஒன்றினை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘சோளக் கொல்லையில சொல்லாமப் போனவனே மீளவழி இல்லாம நீளவழி போனவனே […]

விழாக்கள்