எசெக்ஸ் கொள்கலன் இறப்புகள்: 39 பேரும் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள்

நாடு முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள எசெக்ஸ் பகுதியில் கொள்கலனில் கண்டுபிடிக்கப்பட்ட 39 பேரின் சடலனங்களும் சீன நாட்டைச் சேர்ந்தவர்களுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

39 பேரில் 31 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் அடங்குகின்றனர் எனவும் இந்தச் சம்பவம் தொடர்பாக வடக்கு அயர்லாந்திலுள்ள மூன்று இடங்களில் தேடுதல் நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்கலனுக்குள் இருந்த ஒவ்வொரு உடலையும் நபரையும் அடையாளம் காண்பதற்கு முன் 39 பேரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற ஒரு துயரமான சம்பவத்தில் சீன நாட்டைச் சேர்ந்த 58 பேரின் சடலங்கள் 2000 ஆம் ஆண்டில் டோவர் துறைமுகத்தில் டிரக் ஒன்றினுள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திரு. ஸீரீபன் இருதயறாஜ்

Fri Oct 25 , 2019
x தோற்றம் 23 AUG 1973 மறைவு 22 OCT 2019 மணற்காட்டைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஸீரீபன் இருதயறாஜ் 22.10.2019 செவ்வாய்க் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் ஜோண் லொறட் […]

விழாக்கள்