மகாராஷ்டிரா- ஹரியாணா இடைத்தேர்தலில் பா.ஜ.க முன்னிலை

நடைபெற்ற முடிந்த மகாராஷ்டிரா- ஹரியாணா இடைத்தேர்தலில் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது.

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்றது. இதன் வாக்குகள் எண்ணும் பணி இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கியது.

இதில், 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 160 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி 66 தொகுதிகளிலும், ஏனைய கட்சிகள் 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. 160 தொகுதிகள் வரை முன்னிலை வகிப்பதால் மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணியே ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது.

ஹரியாணா மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி 50 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், ஏனைய கட்சிகள் 10 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

ஆளும் கூட்டணியில், பாஜக 164 இடங்களிலும், சிவசேனை 124 இடங்களிலும் போட்டியிட்டன. எதிர்க்கட்சிக் கூட்டணியில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முறையே 147, 121 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. 1,400 சுயேட்சைகள் உள்ளிட்ட 3,237 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரபல பாடகி உடலில் வெடிகுண்டுகளுடன் வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை

Thu Oct 24 , 2019
x பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி ரபி பிர்ஜடா தன் உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி இந்திய பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விடியோவை சமூக […]

அதிகம் படித்தவை

விழாக்கள்