பிரதமரின் ஒப்பந்தத்துக்கு ஸ்கொட்டிஷ் மற்றும் வேல்ஸ் தலைவர்கள் எதிர்ப்பு

பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை செயற்படுத்தத் தேவையான சட்டத்தை எதிர்ப்பதற்கு வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

விரிவான ஆய்வு இல்லாமல் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை விரைந்து செயற்படுத்த பிரித்தானிய அரசு முயற்சிப்பதாக நிக்கோலா ஸ்ரேர்ஜன் மற்றும் மார்க் டிரேக்ஃபோர்ட் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த வாரம் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த விவாதங்களுக்கு அதிக நேரம் அனுமதிக்குமாறு அவர்கள் பிரதமரை வலியுறுத்தியுள்ளனர்.

மூன்று நாட்களில் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதற்கான திட்டம் பாராளுமன்ற உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் பிரெக்ஸிற் சட்டத்தை கைவிடுவதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார்.

வெஸ்ட்மின்ஸ்ரரில் செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ள ஸ்ரேர்ஜன் மற்றும் டிரேக்ஃபோர்ட், தமது பிராந்தியங்களுக்கு மேலதிக உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

வேல்ஸ் மற்றும் ஸ்கொட்டிஷ் சட்டமன்றங்களில் விரிவான ஆய்வுக்கு வாய்ப்பு இல்லாமல் வெஸ்ட்மின்ஸ்ரர் வழியாக பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயன்றுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதது என ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் பிரித்தானியாவின் அனைத்து சட்டமன்றங்களிலும் விரிவான ஆய்வுக்கு உட்பட்டது மற்றும் ஸ்கொட்டிஷ் பாராளுமன்றம் மற்றும் வேல்ஸ் சட்டமன்றத்தின் கருத்துக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது கட்டாயமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்கொட்டிஷ் முதலமைச்சரும் நானும் பிரெக்ஸிற் தாமத்துக்கான கோரிக்கையை முன்வைத்து பிரதமருக்கும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவருக்கும் கூட்டாக கடிதம் எழுதியுள்ளோம் இதனால் இரு சட்டமன்றங்களும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை விரிவாக ஆராய முடியுமென வேல்ஸ் முதலமைச்சர் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதமரின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீது மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ள டிரேக்ஃபோர்ட், வேல்ஸ் மக்களுக்கான சரியான தீர்வு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதே எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டெஸ்ட் துடுப்பாட்ட – பந்து வீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

Thu Oct 24 , 2019
x கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த டெஸ்ட் துடுப்பாட்ட மற்றும் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. […]

அதிகம் படித்தவை

விழாக்கள்