பா.சிதம்பரத்தின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் பா.சிதமர்பரத்தின் பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது எதிர்வரும் 14ஆம் திகதிக்குள் குறித்த விசாரணை குறித்து பதிலளிக்க வேண்டும் எனவும், சி.பி.ஐ.கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பிணை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 21-ஆம் திகதி கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை 25 நாட்களுக்கும் மேல் காவலில் எடுத்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது.

அத்துடன், கடந்த மாதம் 5-ஆம் திகதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 19ஆம் திகதி நீதிமன்றக்காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 17-ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிதம்பரத்தின் பிணை மனு ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் அவரது பிணை மனு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திரு செல்வநாயகம் செல்வதாசன் (ராசன்)

Sun Oct 13 , 2019
x தோற்றம் 06 MAR 1940 மறைவு 08 OCT 2019 யாழ். மானிப்பாய் லோட்டன் வீதியைப் பிறப்பிடமாகவும்,  தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் செல்வதாசன் அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் […]

அதிகம் படித்தவை

விழாக்கள்