நமது விமானத்தை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு – பதாரியா

நமது ஹெலிகொப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு என விமானப்படை தளபதி ரகேஷ் சிங் பதாரியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி பதான்கோட் தாக்குதலுக்குப் பின் நமது விமானப்படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

அப்போது வானில் பறந்த நமது எம்ஐ-17 ரக விமானம்  நம்முடைய ஏவுகணை மூலம்  சுட்டு வீழ்த்தப்பட்டது.  இதில் ஹெலிகாப்டரில் இருந்த 6 விமானப்படை வீரர்களும் உயிரிழந்தனர். நமது ஹெலிகாப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு.

இந்தத் தவறைச் செய்த 5 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற விசாரணை நடந்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் விமானப்படை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தவறுகள் வரும்காலத்தில் வராமல் பார்த்துக்கொள்வோம்.

ரஃபேல் போர் விமானம், மற்றும் ரஷ்யாவிடம் இருந்து வரும் எஸ்-400 ரக ஏவுகணை இன்னும் விமானப்படையை வலுப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரெக்ஸிற் - பிரதமர் ஜோன்சன் புதிய சவாலை எதிர்கொள்கிறார்

Fri Oct 4 , 2019
x பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தான் சமர்ப்பித்த பிரெக்ஸிற் திட்டங்களில் நெகிழ்வுத்தன்மையைக் காட்டி பிரஸ்ஸல்ஸை சமாதானப்படுத்தும் முயற்சிகளைத் தொடருவார் என்றும் கூறப்படுகின்றது. பிரெக்ஸிற் தொடர்பாக முறையான பேச்சுவார்த்தைளைத் தொடரமுடியுமா என்பதைத் தீர்மானிக்க அவரது தலைமை […]

விழாக்கள்