மரத்தடி பிள்ளையாருக்கு தனி மகிமை உண்டு! எந்த மரத்தடி அதிக அதிர்ஷ்டம் தரும்?

ஆலயங்களில் உள்ள பிள்ளையார்கள் பெரும்பாலும் மரங்களின் கீழே வீற்றிருப்பதை நாம் காண முடியும்.

அந்தப் பிள்ளையாரை எல்லாம், அரச மரத்தடிப் பிள்ளையார், வேப்ப மரத்தடி பிள்ளையார், வன்னி மரத்தடிப் பிள்ளையார் என்றெல்லாம் சொல்லி அழைத்து வழிபாடு செய்வார்கள். தாவரங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையாரிடம், “தா! வரம்” என்று கேட்டால், உடனடியாக தந்து விடுவார். நாவால் பாடி துதித்தால் நற்பலன்களை அள்ளி வழங்குவார்.

மரத்தடி விநாயகருக்குப் பொங்கல் வைத்து (சர்க்கரைப் பொங்கல்), அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்தால், இல்லத்தில் அன்பு பொங்கும், ஆற்றல் பொங்கும், இன்பம் பொங்கும். அரசு ஆல் என பல்வேறு மரத்தடிகளில் அமர்ந்து அருள்புரியும் பிள்ளையாரை வழிபடுவதால் உண்டாகும் பலன்களை பார்ப்போம்: 

அரச மரத்தடி பிள்ளையார்: அரச மரத்தடியில் அமர்ந்து அருள்புரியும் விநாயகரை வழிபட்டு 21 முறை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். மற்றவர்கள் பொருட்செல்வமும் உடல்நலமும் வாய்க்கப் பெறலாம். 

ஆல மரத்தடி பிள்ளையார்: இவரை வழிபட குடும்பம் செழித்து ஒற்றுமையுடன் திகழும். 

வன்னி மரத்தடி பிள்ளையார்: எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்; எதிரிகள் தொல்லை ஒழியும். 

நெல்லி மரத்தடி பிள்ளையார்: இவரை வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும். 

சந்தன மரத்தடி பிள்ளையார்: தொழில் அபிவிருத்தி உண்டாகும். 

வேப்ப மரத்தடி பிள்ளையார்: நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமுடன் வாழலாம். 

மாமரத்தடி பிள்ளையார்: இவரை வழிபட சுமங்கலி பாக்கியம் மற்றும் நலமுடன் வாழலாம். 

புன்னை மரத்தடி பிள்ளையார்: கணவன் மனைவி இடையே மனக்கசப்பு நீங்கி ஒற்றுமையோடு வாழ்வர். மங்கலம் பொங்கும், மகிழ்ச்சி பெருகும். 

மகிழ மரத்தடி பிள்ளையார்: மனதில் தைரியம் பிறக்கும். வாழ்வில் உற்சாகம் ஏற்படும். 

தூங்குமூஞ்சி மரத்தடி பிள்ளையார்: எதிர்பார்த்த காரியத்தில் வெற்றி கிட்டும். 

ஆதிநாராயண மரப் பிள்ளையார்: சுகமான வாழ்வும் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் நவராத்திரி விழா விஞ்ஞாபனம்

Sat Sep 14 , 2019
x 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை முதல் 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை வரையான எட்டு தினங்களும் மாலை 4:30 மணி முதல் துர்க்கா, ல‍ஷ்மி, சரஸ்வதியாக வீற்றிருக்கும் ஸ்ரீ நாகபூஷண கருமாரி அம்பாளுக்கு விசேட நவகலச அபிஷேக ஆராதனை […]

விழாக்கள்