5000 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணர் வாழ்ந்த நகரம் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு!

மகாபாரதம் வெறும் கதையே தவிர அது உண்மையில் நடந்ததில்லை என்று பலரும் கூறுவதுண்டு. ஆனால் அக்கருத்து முற்றிலும் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் மகாபாரதம் நிகழ்ந்த காலத்தில் ஸ்ரீ கிருஷ்னர் வாழ்ந்த துவாரகை என்னும் நகரம் இன்று கடலுக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாருங்கள் அதை பற்றி இங்கு விரிவாக பார்ப்போம்.

ராம சேது பாலம் எப்படி யுகங்கங்களை கடந்து இன்றும் நிலைத்திருக்கிறதோ அது போல பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகாபுரியும் கிட்டதட்ட 5200 ஆண்டுகளாக கடலுக்கு அடையில் முழ்கிக்கிடப்பது தெரியவந்துள்ளது. பாரத போர் முடிந்து சில வருடங்கள் கழித்து கலியுகம் பிறந்தது குறிப்படத்தக்கது. கலியுகம் பிறந்து 5100 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் துவாரகை 5200 ஆண்டுகளாக கடலில் மூழ்கியுள்ளது.இந்திய தேசிய கடலாராய்ச்சி கழகம் கடந்த 1983 முதல் 1990 வரை பதினெட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. அந்த ஆராய்ச்சியின் தலைவராக இருந்தவர் திரு எஸ்.ஆர்.ராவ். அவர் இந்த ஆராய்ச்சிகளின் முடிவை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தின் பெயர் “The Lost City of Dwarka” .

அந்த அகழ்வாராய்ச்சியின் மூலம் பல கேள்விகளுக்கு விடைகிடைத்தது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல அறிய கண்டுபிடிப்புகள் அதன் மூலம் வெளிவந்தது. மகா பாரத போர் ஒரு கற்பனை கதையே என்று பலர் கூறி வந்த நிலையில் அது உண்மையில் நடந்த ஒரு நிகழ்வு என்பதை நிரூபிக்கும் வகையில் கடலுக்கு அடியில் துவாரகை இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கி.மு.1500 ஆம் ஆண்டு வாக்கில் கிருஷ்ணர் துவாரகையிலும் அதன் அருகில் ஒரு குட்டி தீவு போல உள்ள பெட் துவாரகையிலும் வாழ்ந்ததற்கான ஆதாரம் அந்த ஆய்வின் மூலம் வெளிவந்தது.

கடற்கரையில் இருந்து சுமார் அரை மைல் தூரத்தில் அற்புதமான 4 நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நகரங்களில் உள்ள மாளிகைகள் மிகவும் பிரமாண்டமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த மாளிகையின் சுவரில் இடம்பெற்றுள்ள கற்கள் 3600 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட நான்கு நகரங்களுக்கு இடையே தொடர்பும் இருந்துள்ளது. கிட்டதட்ட 18 மீட்டர் அகலமுள்ள இரண்டு வழி சாலைகள் அங்கு இருந்துள்ளது.

தற்போது கடலுக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் இந்நகரம் அந்த காலத்தில் வடக்கு திசை நோக்கி விஸ்தாரமாகி உள்ளது. துவாரகை வடக்கில் விரிவடைந்ததால் அந்த வடக்கு பகுதி ‘பெட் துவாரகை’ என்றழைக்கப்படுகிறது. ஒரு குட்டி தீவுபோல அமைந்துள்ள இந்த பெட் துவாரகை புகுத்தி தான் கிருஷ்ணர் மற்றும் அவரது மனைவியர்களுக்கு பொழுது போக்கும் இடமாக இருந்திருக்க கூடும் என்று அறியப்படுகிறது.

துவாரகையின் நிர்மாணம் பிரமிப்பூட்டக்கூடியது.மேற்குக்கடலிலிருந்து நிலம் பெறப்பட்டு நகரம் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. இது கோமதி நதிக்கரையில் அமைந்துள்ளது. த்வாரமதி, குசஸ்தலை என்றும் துவாரகை அழைக்கப்படது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சந்திராஷ்டமத்தால் எந்த ராசிக்காரருக்கு அதிக நன்மை கிடைக்கிறது? ராசி பலன்கள் உள்ளே!

Fri Sep 13 , 2019
x ஒவ்வொருவரும் சந்திராஷ்டம நாட்களை நினைத்து மிகவும் பயப்படுகின்றனர் அப்படிப்பட்ட சந்திராஷ்டம நாட்களில் அதிக மன உளைச்சல், பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் சந்திராஷ்டம நாட்களில் சில நன்மைகளையும் கொடுக்கிறது. சந்திராஷ்டம நாள் எந்த இராசிக்கு […]

விழாக்கள்