பெண்கள் ஆபாச படம் பார்ப்பது சரியா? தவறா?

பொதுவாக உடல்ரீதியாக அதிகரிக்கும் அந்த உணர்வுக்காகவும், மனதில் எழும் ஆர்ப்பரித்த ஆசையாகவும் ஆண்கள் ஆபாச படங்களைப் பார்த்துச் சுயஇன்பம் அடைவார்கள். இதுபோலச் சுயஇன்பம் அடைவதால் ஆண்களுக்கு எழும் உணர்ச்சிகள் ஒரு வகையில் குறைவதாகக் கூறுவார்கள். அதேபோலச் சுயஇன்பம் அடைவதால் செக்ஸ் மீது உள்ள ஆர்வமும் குறைவதாகச் சில ஆண்கள் தெரிவித்துள்ளனர். எப்போதும் ஆபாச படம் என்றால் ஆண்களே அதிகம் பார்ப்பதாக எண்ணுவோம். ஆனால் ஆபாச படத் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் ஆண்களை விடப் பெண்களே அதிக ஆபாச படங்கள் பார்ப்பதாகக் கூறியுள்ளன. அப்படி இருப்பின், ஆபாச படம் பார்ப்பதால் பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழும்.

பெண்கள் ஆபாச படங்கள் பார்ப்பதால் ஏற்படும் மனநிலை குறித்துத் தெரிந்துகொள்வதற்காக முன்பு Journal of Women’s Health ஓர் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 700 க்கும் அதிகமான பெண்களை வைத்து நடந்த இந்த ஆய்வில் ஆபாச படங்கள் பார்ப்பதால் பெண்களுக்குத் தங்களின் உடல் மீது பாதுகாப்பின்மை ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் பெண்களுக்கும் உடலுறவில் ஈடுபாடு குறைவதாகத் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆபாசப்படம் பார்த்ததின் மூலமாக ஆண்கள் தங்களின் உடல் மீதுள்ள ஆசையால் மட்டுமே தங்களிடம் நெருங்குகிறார்கள் என்ற எண்ணம் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி ஆண்கள் மீது அதிகம் சந்தேகம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சாதாரண ஆபாச படம் என்றாலும் இதில் இடம் பெரும் காட்சிகள் பெண்களின் மனரீதியாகச் சில குழப்ப எண்ணத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். சில பெண்கள் இதைப் பற்றிக் கவலையின்றி இருந்தாலும் பல பெண்கள் குழப்பத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். சில பெண்கள் ஆபாச படங்களில் வருவது போல அவர்களும் அப்படியே செய்ய வேண்டுமோ என்ற பயம் தங்களுக்கு ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர். ஆண்கள் இதனை உடலுறவில் ஈடுபடுவதற்கான தூண்டுதலாகவும்,திருப்தியாகவும் எடுத்துக்கொண்டாலும் அவர்களுக்கும் இதனால் செக்ஸ் மீதான ஆர்வம் குறைவதாகக் கூறுகின்றனர். பெண்களும் தங்களுக்குச் செக்ஸ் மீதான ஆர்வம் குறைவதாகத் தெரிவிக்கின்றனர். ஆகமொத்தம் ஆபாச படங்கள் பார்ப்பதால் இருதரப்பினருக்கும் செக்ஸ் மீதான ஆர்வம் குறைவதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சுதந்திரக் கட்சிக்கு பொதுஜன பெரமுன முன்வைத்த யோசனை தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே

Wed Sep 11 , 2019
x ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பொதுஜன பெரமுன முன்வைத்த யோசனை தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்துத் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் […]

விழாக்கள்