சிவப்பு மஞ்சள் பச்சை திரை விமர்சனம்

சித்தார்த், ஜிவி பிரகாஷ் இருவருமே நல்ல கதைகளை தேடி நடித்துவருகின்றனர் அந்த வைகையில் இயக்குனர் சசி இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை படம் என்ன கதை களத்தில் அமைந்துள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

கதை களம் :

ஜீவி பிரகாஷ் லெஜிமோல் ஜோஸ் அக்கா தம்பிகள் . இவர்களின் பெற்றோர் காலமானதால் தன்னுடைய அத்தையின் வீட்டில் வளர்கிறார்கள் .

ஜீவி பிரகாஷ் பைக் ரேசர். சித்தார்த் போக்குவரத்து காவலர்

ஒரு முறை ஜீவி பிரகாஷ் நண்பர்களுடன் சேர்ந்து பைக் ரேஸில் சாலை விதிகளை மீறி ரேஸில் ஈடுபடுவதை கண்ட சித்தார்த் ஜீவியை கைது செய்கிறார்.

ஜீவியை சித்தார்த் கைது செய்ததுனால் ஜீவி பைக் ரேசில் தோற்று போகும் சூழ்நிலை ஏற்பட ஜீவிக்கு சித்தார்த் மேல் பகை உருவாகிறது. ஜீவி சித்தார்த்தை பழிவாங்க துடிக்கும் நேரத்தில் எதிர்பாரா விதமாக ஜீவியின் அக்காவை சித்தார்த்தை திருமணம் செய்கிறார்.

இருவரின் பகை இந்த திருமணத்தில் என்ன மாற்றங்களை கொடுக்கிறது என்பதுதான் கதை .

படம் பற்றி அலசல்

பெற்றோர் இல்லாமல் அக்காவின் அரவணைப்பில் வளர்ந்ததால் அக்கா பாசம் தனக்கு மட்டும் சொந்தம் என்றிருக்கிறார் ஜீவி . படம் ஆரம்பத்தில் அக்கா தம்பி பாசம் அவ்வள்வு பிணைப்பு இல்லாதமாதிரி தெரிந்தாலும் படம் போக போக நல்ல உணர்வுகளை கொடுக்கிறது .

ஜீவி விளையாட்டு தனமாக இருந்தாலும் ஜீவிக்கும் காஷ்மீரா பர்தேஷி இடையில் காதல் ஏற்பட, காஷ்மீரா பர்தேஷி நிறைய இடத்தில் ஜீவிக்கும் அவரது அக்காவிற்கும் ஆதரவாக அமைந்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஜீவிக்கும் சித்தார்த்துக்கு இடையில் உள்ள பகையை தாண்டி சித்தார்த் லெஜிமோல் ஜோஸ் திருமணம் செய்துகொள்ள தன் பேச்சை கேக்காமல் அவளுக்கு பிடித்தவரை திருமணம் செய்கிறாள், அதனால் சொந்த அக்கா கல்யாணத்திற்கு வராமல் போவது ஜீவியின் பாச போராட்டத்தை வெளி படுத்துகிறது .

இருவருக்கும் திருமணம் முடிய ஜீவியை சித்தார்த் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என்றாலும் முகம் சுழிக்காமல் ஜீவையை சித்தார்த் குடும்பம் கையாள்வது படத்தில் பிளஸ் .

படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது, அதிலும் குறிப்பாக ரேஸ் காட்சிகளை படம்பிடித்த விதம், சித்தார்த் பல இடங்களில் லைவ் லொக்கேஷனில் நடித்துள்ளார், அதையெல்லாம் மிக சிறப்பாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ப்ரசன்னா.

சிவப்பு மஞ்சள் பச்சை என்றவுடன் முழுக்க முழுக்க சமுதாயம் சார்ந்த படம் என்று நினைத்து செல்ல பாச போராட்டத்தில் கட்டி விடுகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஸ்ரீதேவி மகளுக்கு இட்லி வடை சாம்பாரோட திருப்பதியில் கல்யாணமாம்!

Tue Sep 10 , 2019
x 22 வயதாகும் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தன்னுடைய திருமணம் எப்படி நடைபெறவேண்டும் என்ற ஆசையை வெளிப்படையாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். ’அட, இப்பதான் சினிமாவுக்கு வந்துச்சு இந்த பொண்ணு, 22 […]

விழாக்கள்