திருமணத்திற்குப் பிறகு பெண்களின் அந்தப்பகுதி மட்டும் பெரிதாவதற்கு இதுதான் காரணம்!!!

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஒரு அளவிற்கு மேல் நமது உடல் எடை அதிகரிப்பது என்பது கண்டிப்பாக மனதளவில் நம்மை பாதிக்கும் ஒரு விஷயம் தான். குறிப்பாக திருமணத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பது பலருக்கும் ஒரு தலையாய பிரச்சனையாக இருந்து வருகின்றது. அமெரிக்காவின் ஒரு முதன்மைப் பத்திரிக்கையில் வெளியான ஒரு ரிப்போர்ட் இது, சுமார் எண்பது சதவிகித தம்பதியர்களுக்கு அதாவது திருமணத்திற்குப் பிறகு ஐந்தில் இருந்து பத்து கிலோ உடல் எடை அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிகமாக உடல் எடை வேகமாக அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதைப் பற்றி ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள் தம்பதிகள் திருமணத்திற்குப் பிறகு புதிதாக உடல் உறவில் ஈடுபடுவதினாலும், சில ஹார்மோன் மாற்றங்களாலும் தான் இந்த உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகின்றது என்று கூறியுள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகளிலேயே ஆண்களுக்கு வயிற்ருப் பகுதியில் தொப்பை விழுவதும். பெண்களுக்கு உடல் முழுவதுமாக கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பு சதை அதிகரிப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். இதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது உணவு பழக்க வழக்கம் தான். திருமணமான ஒரே வருடத்தில் திடீரென்று அதிகமாக சாப்பிடவேண்டிய கட்டாயத்திற்கு தம்பதிகள் தள்ளப்படுகின்றனர். எந்த உறவினர் வீட்டிற்கு சென்றாலும் தடபுடலாக விருந்து வைத்து தம்பதிகளை சாப்பிட வற்புறுத்துவார்கள். போதும் போதும் என்றாலும் மல்லுக்கட்டி சாப்பிட்டாலே ஆச்சு என்று மன்றாடுவார்கள். புதிய தம்பதிகளின் உடல் எடை அதிகரிப்பிற்கு இது ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இது கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் கர்ப்பகாலத்திற்குப் பிறகு உடல் பருமன் அடைவது வழக்கம். இதற்கு காரணம் தாய்ப்பால் கொடுப்பதும் இடுப்பெலும்பு விரிந்து பிறகு சுருங்குவது தான் என்கின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் பெண்களின் பின்புறம் மட்டும் திருமணத்திற்குப் பிறகு முன்பைக்காட்டிலும் பெரிதாவது ஏன்? இங்கிலாந்தில் உள்ள “University of leeds” என்ற பல்கலைக்கழகம் இது பற்றி ஒரு ஆராய்ச்சியே நடத்தி முடித்திருக்கின்றனர். இந்த ஆராய்ச்சியில் பெண்களின் மிகப்பெரிய உடல் பகுதி பெண்களின் பின்புறம் தான் என்று கண்டறிந்தனர். மேலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை கணவனுடன் உறவில் ஈடுபடும் பெண்களுக்கு இப்படி பின்புறம் சராசரி பெண்ணை விட பெரிதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் கட்டடத் திறப்புவிழா!!

Tue Sep 10 , 2019
x பண்பு, அறிவு, வலு நிறைந்த பிள்ளைகள் சமூகம் ஒன்றை நாட்டுக்கு உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியா செட்டிக்குளம் மகா […]

விழாக்கள்