சரவணன் மீனாட்சி சீரியல் நின்று போக காரணமே கவின் தான்! விஜய் டிவி இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான கவினின் உண்மையான முகம் குறித்து சரவணன் மீனாட்சி மெகா சீரியல் இயக்குநர் பிரவீன் பென்னட் சில தகவல்களை கூறியிருக்கிறார்.

சரவணன் மீனாட்சி சீரியலை அவசரமாக முடித்ததற்கு காரணமே கவின்தான் எனக் கூறிய இயக்குநர் அந்த சீரியல் மூலம் கிடைத்த புகழை வைத்து அவர் ஆளே மாறிவிட்டார் என கூறியுள்ளார். சரவணன் மீனாட்சியின் மூலம் கவினுக்கு கிடைத்த மற்ற வாய்ப்புகளால் இந்த சீரியலை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் விலக போவதாக கூறியது எங்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

சீரியல் முடித்துக் கொடுக்குமாறு எவ்வளவு கெஞ்சினோம். இந்த சீரியலை நம்பி 40 குடும்பங்கள் இருப்பதாகவும் கூறினேன். ஆனால் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. 40 குடும்பங்களை பார்த்தால் நான் வாழ்க்கையில் முன்னேற முடியாது அடுத்த நிலைக்கு போக முடியாது என திட்டவட்டமாக கவின் கூறியதாக வேதனையுடன் தெரிவித்தார் இயக்குநர் பிரவீன்.

மேலும் மீடியா உலகில் வளர்ந்து வரும்போது ஆணவத்துடன் செயல்பட்டால் பெயர் கெட்டுவிடும் பிறகு யாரும் திரும்பி பார்க்க மாட்டார்கள் என நான் கூறியதை கேட்கவில்லை.

பள்ளியில் கவி ராஜன் என்றழைக்கப்பட்டவர் மீடியாவுக்காக கவின் என தனது பெயரை மாற்றிக் கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதா பாத்திரத்தில் நடித்தார். தற்போது பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றிருக்கும் கவின், காதல், பெண்களுடன் கடலை என வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்து வருகிறார் என்றும் தனது வெற்றிக்காக பெண்களை ஒரு பொம்மையாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் மீது பார்வையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நண்பர்களுக்காக வெற்றியை விட்டுகொடுப்பதாகவும் தியாகம் செய்ய போவதாகவும் அவர் பேசும் பேச்சு எப்படியாவது மறைமுகமாக வெற்றி பெறவேண்டும் என்பதற்காகத்தான் எனவும் ஆடியன்ஸ் கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தயவுசெய்து லொஸ்லியாக்கு கிளோஸ்அப் மட்டும் வைக்காதிங்க

Mon Sep 9 , 2019
x 90ஸ் கிட்ஸ் காலத்தில் எல்லோரும் விரும்பி பார்த்த தொடர் ஆனந்தம். அத்தொடரின் மூலம் பெண்களின் உள்ளம் கவர்ந்தவர் நடிகை தேவி கிருபா . தேவி கிருபா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பிக் பாஸ் […]

விழாக்கள்