திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் அர்த்தம் என்ன என்னு உங்களுக்கு தெரியுமா?

இந்துக்களின் திருமணம் பல சடங்குகளைக் கொண்டது. ஒவ்வொரு சடங்கிற்கும் ஓர் அர்த்தம் உள்ளது.

திருமணம் என்பது இருமனம் ஒரு மனமாக இணைவதற்கு நடத்தப்படும் ஓர் விஷேச திருவிழாவாகும். பெண்ணும் ஆணும் இணையும் திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததியை பார்ப்பது ஏன்? 

திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னை பிறர் பார்த்திருந்தால், திருமண நாளில் அதை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வதுடன், தன்னை திருமணம் செய்து கொள்பவரின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள். 

மணமகன் மணமகளின் வலதுகால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைக்கிறான். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சு+டிய கணவன், மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை கூறவே அம்மி மீது காலை வைத்து மெட்டியை அணிவிக்கிறான். 

அதன்பின் மணமக்கள் அருந்ததி தரிசனம் செய்கிறார்கள். சப்தரிஷிகளின் ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததி வானில் உள்ள நட்சத்திர மண்டலங்களில் ஒன்று. வசிஷ்டர் முதலான சப்தரிஷிகளே நட்சத்திரங்களாகத் திகழ்கின்றனர். இந்த நட்சத்திரத் தொகுப்பில் வசிஷ்டர் நட்சத்திரத்துடன் இணைந்தாற்போல் இருக்கும் நட்சத்திரமே அருந்ததி. வாழ்க்கையில் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் பிரியாமல், இணைந்தே இருக்கவேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதே அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சியாகும்.  

இருவரும் உருவத்தில் தனித்தனியாக இருந்தாலும் மனதில் ஒன்றாக இணைந்து இன்ப துன்பங்களை பகிர்ந்து வாழ வேண்டும் என்று கூறவே அம்மி மிதித்து அருந்ததி பார்க்கின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய இன்றய குடைத்திருவிழா காட்சிகள்.09.09.2019

Mon Sep 9 , 2019
x தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய இன்றய குடைத்திருவிழா காட்சிகள்.09.09.2019 நன்றி:படங்கள் & காணொளி: திரு.சுரேந்திரன் வனித்திரன்

விழாக்கள்