Home Breaking News சிரியாவை நெருங்கும் ஈரானின் சர்ச்சைக்குரிய கப்பல் – செய்மதிப் புகைப்படங்கள் வெளியீடு

சிரியாவை நெருங்கும் ஈரானின் சர்ச்சைக்குரிய கப்பல் – செய்மதிப் புகைப்படங்கள் வெளியீடு

67
0

‘அட்ரியன் டார்யா-1’ எனப்படும் ஈரானின் சர்ச்சைக்குரிய எண்ணெய் கப்பலானது சிரியாவை நெருங்குவதாக செய்மதி ஊடாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இதனால், கப்பல் கம்பனியும் ஈரானும் கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய கட்டுப்பாட்டின் கீழான ஜிப்ரல்டார் பிராந்தியத்தில் கடந்த ஜூலை மாதம் கையகப்படுத்தப்பட்ட குறித்த கப்பலானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை மீறி சிரியாவுக்கு செல்வதாக சந்தேகிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது.

ஆனால், சிரியாவுக்கு செல்லாது என வழங்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து குறித்த கப்பல் அண்மையில் விடுவிக்கப்பட்டது. ‘அட்ரியன் டார்யா-1’ விடுவிக்கப்பட்ட நாள் முதல், அது சிரியா நோக்கி செல்வதாகவே வேவு நடவடிக்கைகள் மூலம் அறியப்பட்டது.

நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்ட செய்மதி புகைப்படங்களின் அடிப்படையில் ‘அட்ரியன் டார்யா-1’, சிரியாவை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவின் டர்ருஸ் துறைமுகத்திற்கு மிகவும் நெருக்கமாக குறித்த ஈரான் கப்பல் காணப்படுவதாக ‘மஸர் டெக்னோலொஜீஸ்’ என்ற அமெரிக்க நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இனியும் அந்தக்கப்பல் சிரியாவை நோக்கி செல்லவில்லை என எவராவது மறுக்கிறீர்களா என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இது குறித்து ஈரானோ சிரியாவோ இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. இருந்த போதும் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு அலுவலகம் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், ‘மிகப்பெரும் குழப்பம்’ எனத்தெரிவித்துள்ளது.

‘அட்ரியன் டார்யா-1’ கப்பலில் உள்ள 2.1 மில்லியன் பரல்கள் ஈரானிய மசகு எண்ணெய், சிரியத் துறைமுகத்தில் இறக்கப்படப்போகின்றதா என்பது குறித்தான எந்தவொரு உறுதியான தகவல்களும் இல்லை எனக்குறிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here