அப்படி வாங்க வழிக்கு – Amazonல கோவணம் விக்கிறாங்களா? இந்த ஆச்சர்யத்த பாருங்க!

நாம் எதை எல்லாம் முன்னர் பயன்படுத்தி வந்தோமோ, அதை எல்லாம் ஒளித்துவிட்டு, இது தான் நாகரிகம் என்று ஒரு பழக்கத்தை கொண்டு வந்தார்கள். பிறகு பழமையான முறை என்று கூறி மீண்டும் நம்மை பழைய நிலைக்கே அழைத்து செல்லும் நிலையை தான், இப்போது கண் கூடாக பார்க்கிறோம். இதற்க்கு நாங்கள் அப்படியே இருந்துட்டு போயிருப்போமே.? என்ற கேள்வி நம் மனதுக்குள் எழும். இடையில் நடந்த மாற்றம் தான் அவர்கள் வியாபாரம். கரி, உப்பு போட்டு பல் துலக்கியதை கேவலமாக பார்த்தார்கள், இன்றைக்கு அவர்கள் நாகரிகம் என்று சொல்லும் பேஸ்ட்டில் உப்பு, கரி கலக்கப்பட்டுள்ளதாக கூறி விளம்பரம் செய்கின்றனர். இப்படி தான் மீண்டும் பழமைக்கு மாறி கொண்டிருக்கிறோம். எந்த இடத்தில் மாறினோமோ, அந்த இடத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம். சமீபத்தில் ஒரு நிறுவனம், தாத்தா காலத்தில் கட்டிய கோவணத்தை ட்ரெண்டி உடையாக சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.

இது தான் நவீன கோவணமா?
கோவணத்தை வித்தியாசமான முறையில் தயாரித்துள்ள Infant Yogi நிறுவனம், அதை எப்படி கட்ட வேண்டும் என்ற செயல்முறை விளக்கமும் கொடுத்துள்ளது. குறிப்பாக இந்த உடை ஜிம்மில் வொர்க்அவுட் செய்பவர்கள் அணிய வசதியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. எப்படியோ நம்முடைய பழக்கம் மீண்டும் நம்மவர்கள் மத்தியில் பரவினால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பூஜித் ஜயசுந்தரவின் சத்தியக் கடதாசியை நீக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை

Thu Sep 5 , 2019
x கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள சத்தியக் கடதாசியை நீக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நேற்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சத்தியக் கடதாசி […]

விழாக்கள்