Oral Sex: உறவில் வாய்வழிப் புணர்ச்சி செய்யும் பழக்கம் நல்லதா? கெட்டதா?

இல்லறம் எனும் இன்பக்கடலில் பல வகையான அனுபவங்கள் உண்டு. இதை இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும், அதை அப்படித்தான் செய்யவேண்டும் என்று யாராலும் பாடம் எடுக்க முடியாது. முத்தமிடுவது, முகர்வது இல்லையென்றால் சுவைப்பது. இதில் முதல் இரண்டும் தானாக வந்துவிடும். ஆனால் மூன்றாவது வகையை யாரும் செய்துபார்க்க ஆசைப் படுவதில்லை. ஆனால் சில தம்பதிகள் வாய்வழிப் புணர்ச்சி கொள்வதில் புதுவித அனுபவம் கிடைக்கும் என்று எண்ணுகின்றனர். பலர் இதை முயற்சி செய்த பிறகு “நமக்கு இது சரிப்பட்டு வராது” என்று இந்த பழக்கத்தை கைவிட்டுவிடுவதாக ஒரு சர்வே கூறுகின்றது.

ஆணுறுப்பில் தனது வாயை வைத்து ஒரு பெண் கொள்ளும் இன்பம், அதே ஒரு ஆண் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் தனது வாய்வைத்து இன்பம் கொள்ளுவது இதைத்தான் வாய்வழிப் புணர்ச்சி என்கின்றனர். சாதாரணமான உடலுறவைவிட இதில் அதிகப்படியான இன்பம் கிடைக்கும் என்பது பொதுவான கருத்தாகவே இருக்கின்றது. இந்த மாதிரியான உடலுறவை வைத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்று கேட்டால் அளவோடு வைத்துக்கொண்டால் நல்லது என்றுதான் கூறமுடியும்.

இப்படி உடலுறவு வைத்துக்கொள்ள ஆசைப்படுபவர்கள் சில விதிமுறைகளை பின்பற்றியாகவேண்டும். அந்த விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் இந்த வாய்வழிப் புணர்ச்சியால் வரும் இன்பத்தை முழுமையாக பெற முடியும். இந்த உடலுறவிற்கு முன் இதில் ஈடுபடுவோர் தங்களை சுத்தம் செய்து கொள்வது நல்லது. அதாவது பெண்களும் ஆண்களும் தங்களது உடலுறுப்பை சோப்பால் நன்றாக சுத்தம் செய்த பின்னர் இந்த பழக்கத்தில் ஈடுபடுவது நல்லது.

இந்த வாய்வழிப் புணர்ச்சியில் முழுமையான இன்பத்தை பெற முடியாமல் போவதற்கு பிறப்புறுப்பில் இருக்கும் ரோமங்கள் ஒரு முட்டுக்கட்டையாக இருக்கின்றது. ரோமங்களை முற்றிலுமாக எடுத்துவிட்டால் இதில் முழு திருப்தியை பெறமுடியும். இந்த வாய்வழிப் புணர்ச்சியால் பெண்களின் மனமகிழ்ச்சியும், ஆரோக்கியமும் அதிகமாவதாகவும், மன அழுத்தம் குறைந்து நிம்மதியான தூக்கம் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் ஒரு சர்வே கூறுகின்றது.

நமது மூலையில் சுரக்கும் செரடோனின் என்ற வேதிப் பொருள் குறைவாக சுரக்கும் பொழுது மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கின்றது. உடலுறவில் வாய்வழிப் புணர்ச்சி கொள்ளும் பழக்க உள்ள பெண்களுக்கு இந்த செரடோனின் அதிகமாக சுரப்பதாக ஒரு சர்வே கூறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிதேவதை யார்? அதிதேவதை என்ன தருவார்?

Mon Aug 26 , 2019
x தெய்வங்களின் குணமே கிரஹங்களின் குணம்!* சோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என கண்டறிந்து, அந்த தெய்வத்தை அதிதேவதையாக உள்ளனர். ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிதேவதை.  *சூரியன் […]

விழாக்கள்