இப்படியெல்லாம் தலையில் பூ வைத்தால், தலைமுடி வளராது… எச்சரிக்கை!

பெண்களின் கேசத்திற்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லை தவறாது பூக்களைச் சூடிக் கொள்வதால் தான் மணமுண்டா என்று இதிகாச காலங்களிலேயே சர்ச்சைகள் எழுந்திருக்கிறது.
ஆனால், பூக்களை தலையில் சூடிக் கொள்வதற்கும் ஒரு முறை உள்ளது. நாம் செய்யும் எந்த காரியத்தையும் அதன் பலன்களை அறிந்து, முறையோடு செய்தால் தான் அந்த காரியத்திற்கான பலன்கள் முழுமையாக கிடைக்கும்.

இதே போல தான் பெண்கள் பூச்சூடுவதற்கான முறைகளையும் பண்டைய தமிழர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக பூக்களைச் சூடும் போது எப்போதும், காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் தான் சூடவேண்டும். உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.
மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது உங்களின் கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.
மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.
முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம்.

உடலில் எண்ணெய் தேய்க்கும் போது தாழம்பூ சூடலாம்.
தொடர்ந்து தலையில் பூக்களை வைத்து வருவதினால் ஏற்படும் நன்மைகள்:
பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.
தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும். ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.
மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது. பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது. மனமாற்றத்துக்கு உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒரே ஒரு முறை உடலுறவு கொண்டால் பெண்கள் கர்ப்பமாகிவிடுவார்களா? அசர வைக்கும் உண்மை!

Fri Aug 16 , 2019
x ஒரே ஒரு முறை உடலுறவு கொண்டால் கூட பெண்கள் கர்ப்பமாகிவிடுவார்கள் என்கிற சினிமாத்தனம் உண்மையா என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தமிழ் திரைப்படங்களில் காலம் காலமாக காட்டப்படும் ஒரு காட்சி முதலிரவு நடைபெறும் […]

விழாக்கள்