ஆண்கள் தவிர்க்க வேண்டிய எட்டு வலைத்தள அழகுக் குறிப்புகள்!!!

அழகு என்றாலே அது பெண்களை மட்டும் தான் குறிப்பதாக சில கவிஞர்கள் ஆணித்தனமாக நம்புகின்றனர். ஒரு ஆண்மகன் தன்னை அழகாக வைத்துக்கொள்ள நினைத்தால் அவனை இந்த சமூகம் எள்ளி நகையாடுகின்றது. இந்த மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வந்தாலும் பெரும்பாலான ஆண்கள் தங்களை அழகாக வைத்துக்கொள்ளக் கூச்சப்படுவதாக ஒரு சர்வே கூறுகின்றது. மேலும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மனதளவில் தங்களை அழகாக வைத்துக் கொள்ள, எல்லா ஆண்களும் யாருக்கும் தெரியாமல் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறுகின்றனர். இப்படியானவர்கள் இணையதளம் மூலமாகப் பல beauty tips-களைப் பார்த்து அது சரியானதா இல்லை தவறானதா என்று கூடத் தெரியாமல் கண்மூடித்தனமாக பின்தொடர ஆரம்பித்துவிடுகின்றனர். இதனால் பல பிரச்சனைகளையும் சந்திக்கின்றனர். அப்படியானவர்களுக்காகவே இந்த பதிவு. தன்னை அழகாக வைத்துக்கொள்ள நினைக்கும் ஆண்கள் முதலில் எந்தெந்த beauty tips-களை முயற்சி செய்யக்கூடாது என்பதனைப் பற்றிப் பார்க்கலாம் வாங்க.

#1. முதல் குறிப்பு நமது முகத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்வதற்காக தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தக் கூறி சில அழகுக் குறிப்புகளில் கூறப்படுகின்றது. உடலில் வறட்சியான இடங்களில் மற்றும் முகத்தில் அதிக வறட்சியை உணரும் பொழுது இதை பயன்படுத்தலாம். ஆனால் சாதாரணமாக இதை முகத்தில் பயன்படுத்தக் கூடாது.

#2. இரண்டாவது முகத்தில் கறுப்புப் புள்ளிகளைப் போக்க எழுமிச்சைச் சாற்றை பயன்படுத்தச் சொல்கின்றனர். இதுவும் ஒரு தவறான செயல் தான். அது நமது சருமத்தில் எரிச்சலை உண்டாக்க வாய்ப்புகள் உள்ளன.

#3. மூன்றாவது பளிச்சிடும் வெண்மைக்குச் சர்க்கரை, உப்பு மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை முகத்தில் பயன்படுத்துவது. இது முற்றிலும் தவறான முயற்சி. இதனால் கூட முகத்தில் எரிச்சல்கள் உண்டாகும்.

#4. நான்காவது கண்களுக்குக் கீழே இருக்கும் கருவளையத்தைப் போக்க டூத் பேஸ்ட் (பற்பசை) பயன்படுத்துவது. இதுவும் ஒரு தவறான அழகுக் குறிப்பு. காரணம் இதில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் நமது சருமத்தை மோசமாக மாற்றிவிடும்.

#5. ஐந்தாவது முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவி சருமத்தை மென்மையாக்கும் முயற்சி. இந்த முயற்சியை மேற்கொண்டால் குடல் பிரச்சனைகள் உருவாக வைப்புகள் அதிகம்.

#Lifestyle – ஆண்களே இந்த வலைத்தள அழகுக் குறிப்புகளை மட்டும் பின்பற்ற வேண்டாம். எதைச் செய்தாலும் நன்கு ஆராய்ந்த பின்னர் பயன்படுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா??? ஒரு குட்டிக் கதை!!!

Tue Aug 6 , 2019
x ஒரு ஊரில் மூன்று ஜோடிகள், கிட்டத்தட்ட 20 வயதில் திருமணமாகி, 70 வருடங்கள் ஒன்றாக எந்தச் சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வந்தனராம். இதையறிந்த அனைவரும், அந்த மூன்று ஜோடிகளுக்கும் ஒரு விழா எடுத்துச் […]

விழாக்கள்