கழுத்து கருப்பா இருக்கா? அதை போக்குவது எப்படி? இதோ ஈஸியான டிப்ஸ்!

சிலருக்கு கழுத்து பகுதி மற்றும் கருப்பாக இருக்கும். ஒருசில கார்மோன்கள் குறைபாடு, அதிக நேரம் வெயிலில் நிற்பது, தங்கம் அல்லது வெள்ளி செயின் போன்றவை அணிவதாலும் இதுபோன்று கழுத்து கருப்பாக மாறுகிறது. இதனை வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை கொண்டு எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கருப்பாக உள்ள இடத்தில் லேசாக மசாஜ் செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருப்பு சிறிது சிறிதாக மறைவதை பார்க்க முடியும்.

தயிரை கையில் எடுத்து கழுத்து பகுதியில் மெதுவாக தேய்த்து ஊறவைக்கவும். பின்னர் 5 நிமிடம் கழித்து சுடுதண்ணீரில் கழுத்து பகுதியை அழுத்தி துடைக்கவும். இவ்வாறு செய்வதாலும் கழுத்தில் இருக்கும் கருப்பு மறையும்.

வெள்ளரிச்சாறை கழுத்தில் அடிக்கடி தேய்த்து வந்தால் வறண்டு போன கழுத்து ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு மூன்றையும் சம அளவு கலந்து பால் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். பின்னர் அதனை மைபோல் குழைத்து கருப்பாக உள்ள இடத்தில் தேய்த்து பின்னர் கழுவினாலும் இந்த கருமை நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டி 20 போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள்; இலங்கை வீரர் லசித் மலிங்கா சாதனை

Sat Sep 7 , 2019
x பல்லெகெலே: நியூசிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை வீரர் லசித் மலிங்கா சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. […]

விழாக்கள்